க.திருநாவுக்கரசு. புங்குடுதீவு: கந்தையா திருநாவுக்கரசு, நான்காம் வட்டாரம், 1வது பதிப்பு, மே 1968. (யாழ்ப்பாணம்: கலைவாணிஅச்சகம்).
12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
வட இலங்கை சர்வோதய சிரமதான அமைப்பின் அமைப்பாளரான அமரர் கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் தான் 1964-1968ஆம்ஆண்டுக் காலகட்டத்தில் புங்குடுதீவு கிராமசபையில் கு.வி.தம்பித்துரை அவர்களின் தலைமைத்துவத்தின்கீழ் பணியாற்றியவேளை கிராமசபைக்கு உள்ளேயும் வெளியேயும் தனது வட்டாரத்திற்கும் முழு நாட்டிற்கும் எவ்வகையில் பணிகளைச் செயற்படுத்தினார் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்தப் பிரசுரத்தினை வெளியிட்டிருக்கிறார். இச்சுற்று நிருபத்தில் புங்குடுதீவு கிராமசபையின் கடந்தகால நிதி நிலைமை, அவர் பதவி ஏற்றபின் உருவாக்கப்பட்டுள்ள பண வரவு, அரசாங்க நன்கொடைகள், அவை செலவுசெய்யப்பட்ட விபரங்கள், கடந்த தேர்தலில் தனது வட்டாரத்தில் தான் கூறிய வேலைத்திட்டத்தின்படி நிறைவேற்றப்பட்டுள்ள வேலைகள், சோலைவரியால் எதிர்காலத்தில் சபையின் நிதி நிலைமை ஆகியவைகளைப் பற்றித் தெளிவாகப் புள்ளிவிபரங்களுடன் விளக்கியுள்ளார்.