13366 வாழ்வகம்: 15ஆவது ஆண்டு நிறைவுச் சிறப்பு மலர் 2003.

கோகிலா மகேந்திரன் (மலராசிரியர்). சுன்னாகம்: வாழ்வகம், சபாபதிப்பிள்ளை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

xiii, 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

சுன்னாகத்தில் அமைந்துள்ள விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளின் வாழ்வில்லமாகிய வாழ்வகத்தின் பதினைந்தாண்டு நிறைவை ஒட்டி 20.07.2003 அன்று வெளியிடப்பட்ட மலர். கண் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளின் வாழ்வை வளப்படுத்தும் ஒரு நிறுவனமாக 1988ம் ஆண்டு யூன் மாதம் 29ம் திகதி கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையார் அவர்களால் தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் தனியார் வீடொன்றில் 12 விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது தனியானதொரு கட்டிடத்தில் விழிப்புல வலுவிழந்த பிள்ளைகள் அமைதியான ஆனந்தமான ஒரு சூழலில் அனைத்து வசதிகளையும் பெற்று கல்வியிலே உயர்ந்து தம் வாழ்வை வளம்படுத்திக் கொள்வதற்கான அரியதொரு வாய்ப்பினை இவ் வாழ்வகம் வழங்கி வருகின்றது. விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளின் அறிவுக்கண்ணைத் திறந்து அவர்களின் அகக் கண்ணுக்கு ஒளி கொடுப்பதன் மூலம் அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்கும் வாழ்வகத்தின் பணிகள் தொடர்கின்றன. இம்மலரில் வாழ்த்துரைகள், ஆசியுரைகள், அறிக்கைகளுடன் மனிதருள் மாணிக்கம் மறைந்ததேனோ? (அ.அமிர்தலிங்கம்), அமைதிப் பிரார்த்தனை (ஜெ.அருமைநாயகம்), கண் தானம், கவிதை: மண்ணில் உயர்ந்த தொண்டு (மு.திருநாவுக்கரசு), பார்வையற்றவர்களாக வாழ்ந்து வரும் சிறுவர்கள், வித்தியாசமான ஆற்றலுடையோரை நாம் மதிக்கின்றோமா? (பொ.செல்வரத்தினம்), ஊனம் எமது உடலிலேயே தவிர உள்ளத்தில் அல்ல (க.நகுலாம்பிகை), பார்வையற்றோரின் பாதையிலே (ஆ.பரமேஸ்வரன்), கவிதை: மங்கா மனதில் (து.யசிந்தன்), வலுவூட்டும் தொடர்பாடல் (க. தர்மசேகரம்), பிரித்தானியாவில் விழிப்புலன் வலுவிழந்தோருக்குக் கிடைக்கும் வசதிகள், சிவநெறித் தவமகன் தொண்டிலே வாழும் செம்மல் அன்னலட்சுமி சின்னத்தம்பி, வரலாறு கூறிநிற்கும் பெரியோரும் பிள்ளைகளிற் சிலரும் (ஆ.இரவீந்திரன்), வாழ்வகத்தில் இருந்து பாடசாலை செல்லும் பிள்ளைகள் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39197).

ஏனைய பதிவுகள்

DISASTER Arena Spil Online Gratis!

Content Nordic Bet login casino | Parken og Pena-paladset pr. Sintra, Sintra: Hop-på-hop-af-bussen til slotte Fra 1998 Elementor sammendrag Et periode (eller autopsi) er endelig