க.சிவபாலன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (யாழ்ப்பாணம்: மஹாத்மா அச்சகம், ஏழாலை).
viii, 33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 955-9194-07-0.
மது அருந்துதல் பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஊட்டும் வகையில் அதன் பதிப்புகளின் உண்மைத் தன்மையை விளங்கிக்கொள்ளவும், மது பற்றிய பல தப்பபிப்பிராயங்களை அகற்றவும், மது அருந்துவோரை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கவும், மற்றையோரை அப்பழக்கத்திற்கு ஆளாகாமல் செய்யவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அறிமுகம், உருவாக்கம், அற்ககோல் அகத்துறிஞ்சலும் வெளியேற்றலும், மூளை இயக்கத்தில் உடனடி மாற்றம், குருதிச் சுற்றோட்டத் தொகுதி, சுவாசத் தொகுதி, சமிபாட்டுத் தொகுதி, சிறுநீரகம், குளுக்கோசு உபயோகம், மறுநாள் தாக்கம், மதுவுக்கு அடிமையாதல், நீண்டகால மதுப்பாவனையின் விளைவுகள், கள்ளின் நன்மை தீமைகள், பெண்களும் மதுவும், மதுவும் குடும்பமும், மதுவும் சமூகமும், முடிவுரை ஆகிய பதினேழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.