சிறுவர் செயலகம். கொழும்பு: பெண்கள் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு: குணரட்ண ஓப்செட்).
(4), 33 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
தொடக்க நிலைப் பிள்ளைப்பருவ விருத்திக்காக வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயல்முறைகள் பற்றி எட்டுச் சிறு நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது அவற்றில் இரண்டாவது நூலாகும். இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள், பெற்றோர் தம் குழந்தைகளை இலகுவான மனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதற்கும் அவை பற்றி உரையாடுவதற்கும் உதவுகின்றது. அவ்வகையில் விருந்தினர் வரவு தொடர்பாக இந்நூல் குறிப்பாகப் பேசுகின்றது. விருந்தினரை வரவேற்கும் போது, விருந்தினரோடு இருந்து கதைக்கும் போது, குழந்தைகளுடன் விருந்தினர் வரும்போது, விருந்தினரை உபசரிக்கும்போது, விசேட விருந்தினர் வரும்போது, விருந்தினர் போகும்போது எனப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பிள்ளைகளுடன் பெற்றோர் கொள்ளும் அறிவியல்சார் உரையாடல்கள் மூலம் அவர்களின் உள வளர்ச்சியை எவ்வளவு தூரம் வளர்த்தெடுக்கலாம் என்பதை இந்நூலின் உதவியின் மூலம் அறிந்துகொள்ளலாம். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16195).