சிறுவர் செயலகம். கொழும்பு: பெண்கள் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 34 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
தொடக்க நிலைப் பிள்ளைப்பருவ விருத்திக்காக வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயல்முறைகள் பற்றி எட்டுச் சிறு நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது அவற்றில் ஆறாவது நூலாகும். இதில் குறிப்பாக வெளியே வேலைசெய்யும்போது சிறுவர்களின் செயற்பாடுகள் பற்றியதாகவும் அவர்கள் அறிவூட்டப்படும் முறைமை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் முதியோர்கள் நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும்போது தேவைக்கேற்ப சிறுவர்களையும் அவ்வேலைகளில் சேர்த்துக்கொண்டும் அவர்களுடன் உரையாடிக்கொண்டும் அவர்களுக்கு உற்சாகத்தைப் பெற்றுக்கொடுப்பது முக்கியமானதாகும். தோட்டங்களைத் துப்பரவாக்கும்போது, விதைப்பதற்குப் பாத்தி கட்டும்போது, விதைக்கும் போது, கன்றுகளை நடும்போது, அறுவடையின் போது, பண்டிகைக்கு ஆயத்தமாகும்போது எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் குழந்தைகள் பெற்றோரின் அவதானிப்பின்கீழ் வெளியே அறிவைப் பெறுகின்றனர். (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16194).