ஆ.பேரின்பநாதன். யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
xxxii, 212 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-11624-5-0.
டாக்டர் ஆ.பேரின்பநாதனின் பதினொராவது நூலாக இது வெளிவந்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் (Child Abuse) பற்றிய இந்நூல் 16 தலைப்புகளில் யுனிசெப் அறிக்கைகளையும் இதர ஆவணங்களையும் மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ளது. முதலாவது இயல்- சிறுவர் உயிர்வாழும் உரிமையை இழந்து பசியுடன் அழிவின் விளிம்பில் இன்று மானிடம் என்பதாகும். தொடரும் இயல்களில் மனித உரிமைகளின் வளர்ச்சி நிலைகள், சிறுவர் என்பவர்கள் யார்? சிறுவர் உரிமைப் பிரகடனங்கள், சிறுவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுத்தல், சிறுவர்-பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சட்டமூலத் தண்டனைகளும், முரண்பாடான மனவெழுச்சி நிறைந்த குமரப் பருவம், வளர்ச்சிப் பருவமும் பாலியல் பிரச்சினைகளும், இயற்கைக்கு மாறான பாலியல் முறைகள், சிறுவர் பாலியல் தொழில், சிறுவர் பால்வினை நோய்கள், குழந்தை வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு, சிறுவர் உரிமைகள் மீறல், நீதியின் முன் ஆகிய தலைப்புகளின்கீழ் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21167).