13374 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்.

திலகா சேவியர். கொழும்பு 13: மனித உரிமைகள் இல்லம், 14, பென்றிவ் கார்டன், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (கொழும்பு 13: ஈகுவாலிற்றி கிரப்பிக்ஸ், 315, ஜெம்பட்டா வீதி).

x, 106 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

உங்கள் கவனத்திற்கு, ஒரு பெற்றோரிடமிருந்து பெற்றோர் அல்லது ஆதரவளிப்போருக்கு ஒரு கடிதம், சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயம், சிறுவர் பாலியல் வன்முறைக்கான வரைவிலக்கணம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் பாதுகாப்பிற்கென இலங்கை அரசு ஏற்படுத்திய சட்ட மாற்றங்கள், சிறுவர்  பாதுகாப்புச் சட்டத்தின் பொதுவான விளக்கம், வன்முறை பற்றி வெளிப்படுத்தலும் வெளிப்படுத்தலின் கஷ்டமும், பாலியல் துஷ்பிரயோகத்தினால் ஏற்படும் பொதுவான எதிர் விளைவுகள், பெற்றோர்/பராமரிப்பாளர் கவனத்திற்கு, துஷ்பிரயோகத்தின் தாக்கம் பாதிக்கப்பட்டவருடன் நின்றுவிடுவதில்லை, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய புனைகதையும் உண்மையும், சட்ட அமைப்பு, விசாரணை, பொலிசிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது? சட்ட வைத்திய அதிகாரியிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது? மருத்துவக் கவனிப்பு, வைத்திய பரிசோதனை, அறிவுறுத்தல் படிவம், நேர்முகச் சந்திப்பு, நீதிமன்றம் போதல், பெற்றோர் செய்யக்கூடியவையும் செய்யக்கூடாதவையும், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஏற்படும் மனோரீதியான பாதிப்பு, அணுகக்கூடிய உடல், மனோரீதியான வைத்திய சிகிச்சைத் தேர்வுகள், இறுதியாக சில கருத்துக்கள், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக உதவிபெற அணுகவேண்டிய தொலைபேசி எண்கள் ஆகிய விரிவான தகவல்களைக்கொண்டதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50860).

ஏனைய பதிவுகள்

16711 வாழு வாழவிடு : 16 உருவகக் கதைகளின் தொகுப்பு.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1,1வது பதிப்பு, மார்ச் 2017. (மின்நூல் வடிவம்). 124 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. இந்நூலில் ஆசிரியர் எழுதிய