13376 வீட்டில் கற்றல் சந்தர்ப்பங்கள்-1 (வயது 0 முதல் 1 வரை).

சிறுவர் செயலகம். கொழும்பு: யுனிசெப் சிறுவர் பாதுகாப்பு, ஸ்ரீலங்கா, இணை வெளியீடு, கொழும்பு: மகளிர் விவகார அமைச்சு, 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு: அச்சக விபரம்  தரப்படவில்லை).

56 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

சிறுவர் உரிமைகள் பாதுகாப்பிற்கான ஆரம்பப் படிகளை அவர்களது குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்தல் வேண்டும். இந்த ஒருசில வருடங்களைக் கடக்கும் குழந்தை தொடர்பாக எடுக்கும் தீர்மானங்கள் மீதும் நடவடிக்கைகள் மீதும் குழந்தையின் நிலைப்பு, விருத்தி, அபிவிருத்தி என்பன தங்கியுள்ளன. ஆரம்ப குழந்தை விருத்தியில் வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டதாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. இதில் உங்கள் குழந்தை, சுகாதாரமும் போசணையும் உணவும் பாதுகாப்பும், ஆதரவும் பராமரித்துக் காத்தலும், சுகாதாரம்-உணவு-போசணை-பாதுகாப்பு, விளையாடுதல், தொடர்புகளைக் கட்டியெழுப்புதல்-அனுபவம் பெறல், விளையாடுதலும் பல்வேறு அனுபவங்களைப் பெறலும் ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் பல்வேறு விடயங்களை எமக்கு வழங்குகின்றது. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16192). 

ஏனைய பதிவுகள்

8018 ICT & GIT (தகவல் தொழில்நுட்பவியல்) பல்தேர்வு வினாக்கள், கட்டுரை வினாக்கள் விடைகளுடன்.

கே.செல்வன். யாழ்ப்பாணம்: கே.செல்வன், 1வது பதிப்பு, மார்கழி 2008. (யாழ்ப்பாணம்: ஞானம்ஸ்). 136 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ. க.பொ.த.சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப

10131 இந்து சமய ஆலயங்களின் பரிபாலனத்திற்கான வழிகாட்டிக் கைநூல்.

ஆலயப் பிரிவு (தொகுப்பாளர்கள்). கொழும்பு 4: ஆலயப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,