கொட்வின் டி.சில்வா (மூலம்), ஸ்ரீமதி பி.சிவகுமாரன் (தமிழாக்கம்). கொழும்பு: சனத்தொகைக் கல்விக் குழு, இலங்கைக் கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
(6), 46 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
யுனெஸ்கோ தாபனம், ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சனத்தொகை நடவடிக்கைகளுக்கான நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் இலங்கை கல்வி அமைச்சின் சனத்தொகைக் கல்விக் குழுவினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. இந்நூலாக்கத்திற்குப் பொறுப்பான சனத்தொகைக் கல்விக் குழுவில் W.S.பெரேரா, R.C.ஜயவர்த்தன, R.W.பெரேரா, D.D.P. ஜெயக்கொடி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். சக்தியும் சக்தி முதல்களும், எரிதலும் சூழல் மாசடைதலும், சனத்தொகை வளர்ச்சி ஆகிய பாடங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35406).