தாபி.சுப்பிரமணியம் (இயற்பெயர்: நா.பிரான்சிஸ் சுப்பிரமணியம்). திருக்கோணமலை: திருக்கோணமலை கலை இலக்கிய வட்டம், இல.12, வித்தியாலயம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஐப்பசி 1994. (திருக்கோணமலை: விஸ்டம் அச்சகம், ஏகாம்பரம் வீதி).
(8), 26 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: 18×12 சமீ.
இந்நூலில் கனிஷ்ட சாரணருக்கான சிறப்புத் தகைமைகள், சாரணிய இலட்சியம், சாரணர் பிரமாணம், சாரணர் விதிகள், சாரணர் கொள்கை, சாரணர் சின்னம், சாரணர் சமிக்ஞை, சாரண வணக்கம், கைகுலுக்கும் விதம், தேசிய கீதம், தேசியக் கொடி, சாரணிய வரலாறு, இலங்கையில் சாரணியம், அணிநடை, ஆரோக்கியம், வழிகாட்டுக் குறிகள், முடிச்சுக்கள், செடி வளர்த்தல், சேமித்தல், சீருடை, சின்னம் சூட்டும் நிகழ்வு, உலக சாரணிய நோக்கம், சாரணியத் தந்தையின் வார்த்தை, சீருடை விளக்கப்படம் ஆகிய 28 அத்தியாயங்களில் கனிஷ்ட சாரணியம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்நுலாசிரியர் ஒரு பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராவார். நிலா என்னும் பத்திரிகையை சிலகாலம் நடாத்தி வந்தவர். கலை இலக்கியம், ஓவியம் ஆகிய துறைகளில் இவர் 30 ஆண்டுகள் ஆற்றிய பணிகளுக்காக 2000ஆம் ஆண்டு ஆளுநர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14766).