NESR நெறிப்படுத்தும் குழு. யாழ்ப்பாணம்: Northern Education System Review, மாகாணக் கல்வித் திணைக்களம், வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 2014. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xxvi, 238 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ., ISBN: 978-0-692-24907-9.
மாகாண கல்வி அமைச்சராக த.குருகுலராஜா அவர்கள் பணியாற்றிய வேளையில் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட கல்விமுறை பற்றிய மீளாய்வு அறிக்கை இது. வடமாகாண கல்வி அமைப்பை மீளாய்வுசெய்யும் செயன்முறை, நிகழ்கால சூழ்நிலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் நிர்வாகம், மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் உள-சமூக நன்னிலையைப் பேணுதல், கற்றல் கற்பித்தல் பரீட்சைகள், தனியார் கல்வி நிலையங்களும் வடமாகாண கல்வி அமைப்பின் மீதான அவற்றின் தாக்கங்களும், நிர்வாகம், நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், மற்றும் ஆசிரியர் பிரச்சினைகள், நிதி, ஆளணித் தேவைகள், செலவினங்கள் மற்றும் ஆசிரியர் வேதனங்கள், e-திட்டமிடல், தரவுத் தளம் ஆராய்ச்சி மற்றும் வெளியீடு, வடக்கில் முன்-பிள்ளைப் பராய மேம்படுத்தலுக்கான கல்வி, விசேட கல்வி, தொடர்ச்சியான கல்வி, தமிழ்மொழி மூல கல்வி நிறுவகம், வடமாகாணத்துக்கான ஒரு புதிய கல்வி நிர்வாக முறைமை, அமுலாக்கல் செயன்முறை கால எல்லை மற்றும் பொறுப்பு, முடிவுகளும் பரிந்துரைகளும், ஆகிய 15 தலைப்புகளில் ஏராளமான பின்னிணைப்புகளுடன் இலவ்வறிக்கை விரிவாக வழங்கப்பட்டுள்ளது.