தி.ஆதிரையன் (இதழாசிரியர்), வி.கிரிதரன் (சிரேஷ்ட துணை இதழாசிரியர்). கொழும்பு 7: இந்து மாணவர் மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1985. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).
(144) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
கொழும்பு றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தின் ஆண்டு மலர் இது. ஆசியுரைகள், அறிக்கைகள், வர்த்தக விளம்பரங்களுக்கிடையே தமிழ் அறிஞர்கள், மாணவர்களின் இந்துசமயக் கட்டுரைகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. துணைநீ தயாளினி, பரிசுப் பட்டியல், சைவ சமயத்தை வாழவிட்டோம், சைவ சமயத்தை வாழவிடுங்கள், இந்து சமயம்- அன்றும் இன்றும், பல தெய்வங்கள் அவசியம், இந்து மதம் சொல்கின்றது வாழ்க்கை வாழ்வதற்கே ஆகிய தமிழ் ஆக்கங்களும், பிற ஆங்கில, சிங்கள ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4449).