13390 தமிழ்க் கல்விக்கூடம்: 30வது ஆண்டு விழா மலர்-2019.

பிரகலாதன் (நிறுவனர்). பாரிஸ்: ASCES தமிழ்க் கல்விக் கூடம், 35, rue Maurice Lachatre, 93120 La Courneuve, 1வது பதிப்பு, 2019. (பாரிஸ்: Copie Courneuve, 92, Avenue Paul Vaillant Counturier, 93120 La Courneuve).

78 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×19.5 சமீ.

பாரிசில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களுக்கென அவர்களது பிரெஞ்சு மொழியறிவை வளர்த்துக்கொண்டு, அவர்கள் தொழில்சார் விருத்தியை அடையச்செய்யும் நோக்கில் 1989இல் பிரெஞ்சு மொழி வகுப்புக்கும், கலை-கலாச்சார வகுப்புகளுக்குமாக ASCES தமிழ்க் கல்விக் கூடம் என்ற பெயரில் பாரிஸ் 14இலுள்ள Pernety என்ற இடத்தில் பிரகலாதன் தம்பதியினரால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இடப்பிரச்சினை காரணமாக 2003இல் பாரிஸ் 19இற்கு இடம் மாற்றப்பட்டது. பின்னர் 2007ஆம் ஆண்டு முதல் La Courneuve தேவாலயத்தில் மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகளைத் தொடங்கி சிறுவர் நிலை முதல் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு வரையில் கல்வியறிவு ஊட்டப்படுகின்றது. Bobigny, LeBlanc Mesnil, Epinay sur seine ஆகிய இடங்களில் தமிழ், ஆங்கில, கலை வகுப்புகள் கொண்ட கிளைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்நிறுவனத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக எராளமான குழுநிலைப் புகைப்பட நினைவுப் பதிகைகளுடன் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்