13391 துலங்கல் 2: 1990-1991.

L.C.ஜெயசீலன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: தொழிலாளர் கல்விக்கழகம், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

(14), 102 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் கல்வி பேராசிரியர் அ.துரைராசா துணைவேந்தராக விருந்த காலத்தில் 1991 மேமாதம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துறையினரின் ஆண்டு வெளியீடாக இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் விஞ்ஞான தொழில்நுட்பவியற் கல்வி தனிநபர் விருத்தி சார்பான ஒரு நோக்கு, குழு என்பதன் சமூக உளவியல் நிலைப்பட்ட நோக்கும் அறைகூவற் குழுக்களும், குழந்தைப் பராமரிப்பில் உணவுப் பழக்க வழக்கமும் எதிர்கால சந்ததியும், பல்லின சமுதாயமொன்றிற்கு முன்மாதிரியாக அமையும் சுவிற்சர்லாந்து நாட்டின் நிர்வாகமுறை, வரலாற்றுப் பொருள்முதல் வாதம் வரலாற்றுக்குக் கொடுக்கப்படும் மார்க்ஸீய விளக்கம், மனிதனின் சூழலில் பூச்சிகளால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள், எண்ணும் எழுத்தும், திருமுறைகளில் சைவசித்தாந்தம், தொழிலாளர் கற்கைநெறியின் பயன், சுகமான வாழ்வுக்கு சுகாதாரம், கலையும் கல்வியும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தற்போதைய விவசாயம் உழவுத் தொழில், பனை, தென்னை வன அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமீபத்திய வளர்ச்சிகள், பொல்லாத போதையும் புண்ணாகும் வாழ்க்கையும், கூர்ப்பு, உயிர்வாயு தயாரித்தல், கணனி, தொழிலாளரும் தொழிற் சட்டங்களும், கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, யாழ்ப்பாணப் புகைப்படக்கலை வரலாற்றில் சில குறிப்புகள், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும், மனித தோற்றம்பற்றி சிறு ஆய்வு, தொழிலாளர் வாழ்வில் தொழில்நுட்பக் கல்வியும் தொழிலாளர் கல்விச் சான்றிதழ் நெறியும், இயங்கியல் நோக்கில் கணிதம், கல்வி எதுவரை, கைகொட்டிச் சிரியாரோ?, பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் கல்வி, எங்கள் கல்வியில் எண்கோண நோக்கு, தொழிலாளர் வளர்ச்சிக்கு யோகாசனத்தின் பங்கு, விவேகக் கணிதப் புதிர்கள் ஆகிய 31 ஆக்கங்கள் இம்மலரில் மேற்படி துறையின் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31102).

ஏனைய பதிவுகள்

15779 திருஞானதீபன் அல்லது திரு இரத்தினமாலை (நாவல்).

வண.சகோதரர் வ.அல்போன்ஸ். யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை, 1வது பதிப்பு, நவம்பர் 1925. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை). iv, 148 பக்கம், விலை: 40 சதம், அளவு: 18×12.5 சமீ. அரண்மனைவாசம், அழகாபுரம்,