மதிவாணி விக்னராஜா (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: முழுநிலாக் கலைவிழாக் குழு, மாகாணக் கல்வித் திணைக்களம், வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
ix, 83 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.
வட மாகாணக் கல்வித் திணைக்களம் ஒவ்வொரு வருடமும் மாதம்தோறும் நடாத்தி வருகின்ற முழுநிலா நாள் கலைவிழா வரிசையில் 2017ம் ஆண்டின் முதலாவது விழா நாளன்று வெளியிடப்படும் மலர் இது. ஆசியுரைகள் வாழ்த்துரைகளுடன், பண்டைத் தமிழர் முழவியலும் ஈழப் பெரும் பேரிகையும் (லி.அனிருத்தன்), சலன சங்கம சங்காரம் (பாகீரதி கணேசதுரை), மாணவர்க்காய் கலை படைக்கும் மட்டுவிலூர் நாகராஜா ஓர் அதிசயப் பிறவி (கே.எஸ்.சிவஞானராஜா), மாணவர்களின் மென்திறன் விருத்தியில் கலைகளின் பங்களிப்பு (த.தயாபரன்), வரைதலின் மூலம் மனவளர்ச்சி அடைவோம் (பா.இரமணாகரன்), இறைவன் படைப்பினிலே-கவிதை (கே.எம்.ஜே.அஸீஸ்), பாரம்பரிய நடனங்கள் கிராமிய நடனங்களின் தோற்றம் (ஜெ.அருள்மயம்), பண்ணின் ஆதிமூல வரலாறும் சிறப்பும் (மலர்விழி கனகசபை), மாணவர்கள் நல்லொழுக்கத்தில் கலைகளின் வகிபாகம் (சி.உமாசிவம்), தமிழ்-கவிதை (நல்லை அமிழ்தன்), தமிழில் சிற்றிலக்கியம் (க.குணரத்தினம்), எழில்மிகு மன்னார் மாதோட்டம் (மல்லிகா மரியதாசன் சில்வா), ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு இணை பாடவிதானக் கல்வியின் அவசியம் (சூரியயாழினி வீரசிங்கம்), இலங்கையில் கர்நாடக இசை (கமலராணி ஜெயபாலசிங்கம்), புருஸ் லீ-தற்காப்புக் கலையின் முடிசூடா மன்னன் (சுந்தரதாசன் புகழ்நிலா), வசந்தம் இங்கே வந்தது என்றே பாடிடுவோம்-கவிதை (புனிதகுமாரி ஈழநேசன்), பரத நாட்டிய அறிவியல் (அ.உமா மகேஸ்வரி), இசைக் கலை வளர்ச்சியில் தமிழ் சினிமாப் பாடல்களின் பங்களிப்பு (இ.சண்முகலிங்கம்), அம்மா-கவிதை (பூவேந்தன்), வகுப்பறைக் கல்வியும் அழகியல் உணர்வும் (திருமகள் தேவராஜா), ஆசிரியர்-கவிதை (யாழினி), ஆடற்கலை ஒரு வரலாற்று நோக்கு (கவிதா ஸ்ரீ ஜெயாகரன்) ஆகிய படைப்பாக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.