செல்வராஜா தேவச்சந்திரன் (பத்திராதிபர்). கொழும்பு 4: தமிழ் மாணவர் மன்றம், கொழும்பு இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
170 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.
மாணவர்களின் இலக்கியத் திறமைகளை வெளிப்படுத்த இம்மலர் நல்லதோர் களம் அமைத்துக் கொடுத்துள்ளது. இவ்விதழ் பேச்சு, கட்டுரை என்பவற்றுடன் தம் இலக்கிய திறமைகளைக் குறுக்கிக் கொள்ளாமல் கவிதைத் துறையிலும் தமது காலடிகளைப் பதித்துள்ளனர். மேலும் நம்மில் பலர் மறந்துவிட்ட மறைந்த தமிழ்ப் பெரியார்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுக் குறிப்புகளையும் இம்மலரில் காணமுடிகின்றது. பத்திராதிபர் குழுவில் சண்முகசுந்தரம் குலேஸ், ஸ்ரீகாந்தா சுபாஸ், கிருஷ்ணமூர்த்தி கலைச்செல்வன், விஷ்வகுமார் அரவிந்தன் ஆகியோர் அங்கம் வகித்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13492).