13403 வித்தியா லயம்.

இஸட்.ஏ.ஸன்ஹிர் (மலராசிரியர்). புத்தளம்: தமிழ்ப்பிரிவு, வலயக் கல்விப் பணிமனை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

567 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30.5×21.5 சமீ., ISBN: 978-624-95624-0-0.

புத்தளம் மாவட்டத்தின் கல்வி வரலாற்றை இம்மலர் விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்துகின்றது. வாழ்த்துரைகள், மலர்க்குழு, வித்தியாலயத்தின் குரல் (மலராசிரியர்), வித்தியா ‘லயம்’ (Z.A.ஸன்ஹிர்), சமூகவியல் நோக்கில் புத்தளம் மாவட்டத்தில் நவீன கல்வியின் அறிமுகம் (M.S.M..அனஸ்), புத்தாயிரம் ஆண்டும் புத்தளம் பிரதேசத்தின் கல்வி நிலையும் (M.A.M.M. ஜவாத் மரைக்கார்), யுத்தத்தால் இடம்பெயர்ந்து புத்தளம் பிரதேசத்தில் வாழும் வடபுல மாணவர் கல்வி: ஓர் அனுபவப் பகிர்வு (A.M.நஹியா), புத்தளத்தில் ஆசிரியர் கல்வி (M.H.M.நவாஸ்), ஆரம்பக் கல்வியின் வாசிப்பு, எழுத்துத் திறன் இடைநிலை அடைவு மட்டத்தில் செலுத்தும் செல்வாக்கு (வே.அருணாகரன்), 2020-ஆரம்பப் பிரிவில் அனைவரும் வாசிப்பர், எழுதுவர், எமது வித்தியாலயங்கள் (வலய வரைபடம், புத்தளம் வடக்கு, புத்தளம் தெற்கு, கல்பிட்டி, பள்ளம், ஆனமடுவ), தமிழ்ப் பிரிவின் தனிவழிப் பயணத்தில் சில பணிகள், எமது வித்தியாலயங்களின் பண்புத்தர விருத்தியில் தமிழ்ப் பிரிவு, செயலமர்வுகளில் சில, புத்தளம் கல்வி வலயம், கோட்டங்கள் வெளியிட்ட சஞ்சிகைகளும் கையேடுகளும், பணிமனைக்குப் பொறுப்பான பணியாளர்கள், பணிப்பாளர்களும் இணைப்பாளர்களும், புத்தளம் பிரதேசத்தில் பணியாற்றிய தமிழ்மொழிமூலக் கல்வி அதிகாரிகள், புத்தளம் பிரதேசத்தின் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், பாட இணைப்பாளர்கள், வளவாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், முன்னாள் ஆசிரிய ஆலோசகர்கள், சம்பவத் திரட்டுக்களிலிருந்து, சுவடிக்கூடம், பின்னிணைப்பு (பாடசாலைகள்,ஆசிரியர்கள், மாணவர்கள் விபரம், பெறுபேற்றுப் பகுப்பாய்வு), முகாமைத்துவப் பங்காளிகளின் முகங்கள் (பணிப்பாளர்கள், வலய ஆளணியினர், அதிபர்கள் (புத்தளம் வடக்கு, ஆனமடுவ/புத்தளம் தெற்கு, பள்ளம்/கல்பிட்டி), ஆசிரிய ஆலோசகர்கள், மலர்க் குழுவினர், வித்தியாலயங்களின் ஆசிரியர் குழாம் (புத்தளம் வடக்கு/ புத்தளம் தெற்கு/கல்பிட்டி/ஆனமடுவ, பள்ளம்), ஒளிப்படப் பேழை, வித்தியாலயம் நன்றியுடன் நினைவுகூருகின்றது ஆகிய 30 பிரிவுகளின்கீழ் இவ்வாவணத் தொகுப்பு மிக விரிவாகவும் நேர்த்தியாகவும், புகைப்பட ஆவணங்களுடன் புத்தளம் மாவட்டத்தின் கல்வி வரலாற்றை பதிவுசெய்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Melhores Free Spins Brasil 2024

Content Os Jogos Criancice Cassino Online Amadurecido Justos? Top 5 Melhores Casas Criancice Apostas Brasileiras Top Casinos Online Russos Uma vez que símbolos sinistros que