மலர்க் குழு. திருக்கோணமலை: ஸ்ரீ சண்முக இல்லம், 54, வித்தியாலயம் வீதி, 1வது பதிப்பு, 1992. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு).
(22), 56 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19.5 சமீ.
ஸ்ரீ சிற்றம்பலம் சண்முகம்பிள்ளை அவர்களின் துணைவியாரும், 1923இல் நிறுவப்பெற்ற ஸ்ரீ சண்முக வித்தியாலய ஸ்தாபகரும், ஸ்ரீ சண்முக ஸ்தாபனத்தின் கர்த்தாவுமாகிய திருமதி தங்கம்மா சண்முகம்பிள்ளை (15.08.1863-02.05.1953) அவர்களின் நினைவாக 1957இல் உருவாக்கப்பட்ட ஸ்ரீ சண்முக இல்லம் தனது 35ஆவது ஆண்டை 1992இல் பூர்த்திசெய்த வேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இதுவாகும். இம்மலரில் ஸ்ரீ சண்முக சிறுவர் இல்லக் கீதம் (சைவப் புலவர் பண்டிதர் சி.வடிவேல்) முதலிலும், அதனைத் தொடர்ந்து திருமதி பத்தினியம்மா திலகநாயகம் போல், திரு.நாகலிங்கம் புவனேந்திரன் ஆகியோரின் முகவுரைகளும், பிரமுகர்களின் ஆசிச் செய்திகளும் வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து, ஸ்ரீ சண்முக இல்லம் வாழ்த்து (விமலானந்த மாதாஜி மற்றும் அன்பர்கள்), ஸ்ரீ சண்முக இல்லம் (சி.வடிவேல்), ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனம் வரலாறும் சேவைகளும் (விமலா நடராஜா), The Dream comes true (T.Arumugam), ஸ்ரீ சண்முக இல்லத்தின் உருவாக்கமும் அதன் பணிகளும் (கமலா இராஜேந்திரா), A Mile stone in Trincomalee’s History (O.L.M.Ismail), ஸ்ரீ சண்முக மாணவர் இல்லமும் மாடிக் கட்டிடமும் (செல்லப்பா சிவபாதசுந்தரம்), எமது இல்லம் (இல்ல மாணவி), ஸ்ரீ சண்முக தர்ம ஸ்தாபனம் (பொ.கந்தையா), ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனத்தின் சேவைகள் (பாலேஸ்வரி), இல்லத்தில் வருடாந்தம் கொண்டாடப்படும் வைபவங்கள், துயில் நீத்ததும்: சுவாமி சிவானந்தர் சிகாகோ சொற்பொழிவுகள் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24594).