ஜகத் பண்டாரநாயக்க (மூலம்), அ.சிவநேசராஜா (தமிழாக்கம்). பன்னிப்பிட்டி: ஜகத் பண்டாரநாயக்க, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு).
ix, 176 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 22×14 சமீ., ISBN: 955-96178-2-6.
முயற்சியாண்மை (முயற்சியாண்மையும் சமூகமும், முயற்சியாளர், முயற்சியாண்மைப் பண்புகள்), இலங்கையின் கைத்தொழில்கள் (இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்திக் கட்டமைப்பு, கைத்தொழில் துறையின் போக்கு, கைத்தொழிற் கொள்கைகள், கைத்தொழில் துறைக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு, கைத்தொழில் வளர்ச்சி, கைத்தொழிலுக்கு வழங்கப்பட்ட கடன்கள், கைத்தொழில் கொள்கையின் நோக்கங்கள், கைத்தொழில்களை வகைப்படுத்தல்), வணிக முகாமைத்துவம் (முகாமைக் கருமங்கள், முகாமைத்துவத் தொழிற்பாடு, நோக்கமும் இலக்கும், திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல், நவீன முகாமைத்துவ எண்ணக்கருக்கள்), உற்பத்தி (கொள்வனவு, தரக்கட்டுப்பாடு, ஐ.எஸ்.ஓ. தரம், சரக்குக் கட்டுப்பாடு, உற்பத்தி முறைகள்), வணிக நிதி (நிதித் தேவை, நிதி மூலம், பாதீடும் காசுப் பாய்ச்சலும், சமப்பாட்டுப் புள்ளிப் பகுப்பாய்வு, நிதிச் சந்தை, அலகுப் பொறுப்பாட்சி, நிதி விகிதங்கள்), சந்தைப்படுத்தல் (சந்தைப்படுத்தலும் சமூகமும், சந்தைப்படுத்தலின் பரிணாம வளர்ச்சி, சந்தைப்படுத்தல் எண்ணக்கரு, சந்தைப்படுத்தலின் சமூகப் பொறுப்பும் விழுமியங்களும், சந்தைப்படுத்தலும் வணிக ஒழுங்கமைப்பும், சந்தைப்படுத்தும் தகவல்களும் ஆராய்ச்சியும், சந்தைப்படுத்தல் திட்டம், சந்தைப்படுத்தல் கலவை, உற்பத்திப் பொருள் வகை, பொருட்கள் சேவைகளை இனங்காணல், பொதியிடல், சுற்றுறையிடல், சேவை, புதிய பண்ட அபிவிருத்தியும் உற்பத்தி வாழ்க்கை வட்டமும், சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி, விலையிடல், இடம்ஃபங்கீடு, மேம்படுத்தல், தனிப்பட்ட விற்பனை, விற்பனை மேம்படுத்தல், மக்கட் தொடர்பு, நேர் சந்தைப்படுத்தல்), மனிதவள முகாமைத்துவம்ஃஆளணி முகாமைத்துவம் (மனிதவலுத் திட்டமிடல், ஆட்சேர்ப்பும் தெரிவும், தொழில் இசைவாக்கம், ஃதிசைமுகப்படுத்தல், பயிற்சியும் அபிவிருத்தியும், செயற்றிறன் மதிப்பீடு, கைத்தொழில் தொடர்பு), வணிகத் திட்டம் (வணிகத்திட்டத்தின் மாதிரி, வணிகமொன்றை ஆரம்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியஅம்சங்கள்) ஆகிய பாடப்பரப்புகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. இந்நூலாசிரியர் ஜகத் பண்டாரநாயக்க ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக கற்கை பீடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36480).