ஹேம விஜயவர்த்தன (மூலம்), வே.பேரம்பலம் (பதிப்பாசிரியர்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1977, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: அரசாங்க அச்சுக் கூட்டுத்தாபனம்).
v, 69 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
தேசிய உயர்கல்விச் சான்றிதழ்ப் பரீட்சைக்குரிய வர்த்தக பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட இந்நூலில் கைத்தொழில், வர்த்தகம் என்பவற்றின் அமைப்பு, சில்லறை வியாபாரம், வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள், மொத்த விற்பனை வியாபாரம், பண்ட விநியோகம் ஆகிய ஐந்து அத்தியாயங்களின் கீழ் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தோர் இ.சிவானந்தன், த.ர.இராஜலிங்கம், வே.பேரம்பலம் ஆகியோராவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23433).