என்.சண்முகலிங்கன் (ஆங்கில மூலம்), பக்தவத்சல பாரதி (தமிழாக்கம்). சென்னை 600 083: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 600 029: சென்னை மைக்ரோ பிரின்ட் லிமிட்டெட்).
255 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 190., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-81343-45-6.
பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவர்களின் ஆய்வேடான ‘A New face of Durga’ என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். தாய்த் தெய்வங்கள் தொடர்பாக உலகளாவிய ஆய்வியல் ஆர்வம், மாhனிடவியல், சமயவியல், பெண்ணியம்; ஆகிய புலங்களின் வழி இன்று மறுமலர்ச்சிபெறக் காணலாம். இவ்வாறான ஆய்வுகளின் ஊற்றுக்கண்களாக தென்னாசியப் பண்பாட்டுப் புலங்கள் முதன்மை பெறுகின்றன. இந்த வகையில் பல்வேறு சமூக பண்பாட்டு நெருக்கடிகளையும் அதிர்ச்சிகளையும் எதிர்கொண்ட இலங்கையின் வடபுலத்து யாழ்ப்பாணத்தில் துர்க்கை வழிபாடு கண்ட புதிய எழுச்சியின், மாற்றங்களின் சமூகவியலைப் பகுப்பாய்வு செய்யும் தேடலே இந்நூலாகும். துர்க்கை வழிபாட்டின் எழுச்சி, ஆய்வுத் தேடலின் முறையியல், யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பில் பெண்களும் திருமணமும், காலவெளியில் துர்க்கையின் பன்முகங்கள், புதுமுகத் துர்க்கையின் பன்முகக் கோயில்கள், நிறைவுக் குறிப்பு ஆகிய ஆறு இயல்களில் இவ்வாய்வு நூல் எழுதப்பட்டுள்ளது.