க.இ.க.கந்தசுவாமி. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர்; 1989. (கொழும்பு: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.
மொறிஸியஸ் நாட்டில் 1989, டிசம்பர் 3-8ஆம் திகதிகளில் நடந்த ஏழாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. இவ்வாய்வு, நடுகல் வழிபாடு- மரபுகளும் அதன் வளர்ச்சியும், ஈழநாடும் யாழ்ப்பாண அரசும், எல்லாளன் நடுகல் வழிபாடு, கண்ணகி நடுகல் வழிபாடு, இளந்தாரி நடுகல் வழிபாடு, காலிங்கராயன் கைலாயநாதன் வரலாறு, ஆட்சிச் சிறப்பு, இவ்வழிபாட்டின் தொடக்கமும் வளர்ச்சியும், ஆண்டுப் பெருவிழா வழிபாடு, நடுகல் வழிபாட்டின் சிறப்பு, முதலியர் வழிபாடு, அண்ணமார் வழிபாடு, நாச்சிமார் நடுகல் வழிபாடு, ஏனைய நடுகல் வழிபாடுகள் ஆகிய பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10187).