13417 உடப்பூர் வாய்மொழிப் பாடல்கள் நாட்டாரியல் வள(ல)ம்.

 வ.சிவலோகதாசன்;. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xiv, 130 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-78-7.

உடப்பூர் காவியங்கள் (பத்து), அம்மன் எச்சரிக்கைகள் (நான்கு), அம்மன் ஊஞ்சல்கள் (இரண்டு), அம்மன் கும்மிகள் (ஒன்பது), தவசி நிலைப் பாடல்கள் (இரண்டு), அம்பாப் பாடல்கள் (ஆறு), தாலாட்டுப் பாடல்கள் (மூன்று), ஒப்பாரிப் பாடல்கள் (ஒன்று), கோலாட்டப் பாடல்கள் (இரண்டு), விளையாட்டுப் பாடல்கள் (ஏழு) என பத்துத் தலைப்புகளின் கீழ் நாற்பத்தியாறு வாய்மொழிப் பாடல்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பேராசிரியர் கலாநிதி வஸ்தியாம்பிள்ள சிவலோகதாசன் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பேராசிரியராவார். உடப்பூரில் கல்வி பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது வியாபார கற்கைகள் துறையில் இளமாணிப் பட்டத்தையும், தாய்லாந்து ஆசியன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வியாபார முதுமாணிப்பட்டத்தையும், சீனாவில் ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் புத்துமை முகாமைத்துவத் துறையில் (Innovation Management) கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

12998 – செந்தமிழ் வாசகம்: ஐந்தாம் புத்தகம்.

மணி. திருநாவுக்கரசு முதலியார். சென்னை: மணி. திருநாவுக்கரசு முதலியார், தமிழாசிரியர், சென்னை பச்சையப்பன் கலாசாலை, 1வது பதிப்பு, 1944. (சென்னை: ஜுப்பிட்டர் பப்ளிஷிங் ஹவுஸ்). (4), 120 பக்கம், சித்திரங்கள், விலை: 0-8-6 அணா,