சின்னத்தம்பி சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiii, 119 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-659-573-4.
வாய்மொழி மரபின் ஒரு பகுதியாக – வளர்ச்சி நிலையாக அமைகின்ற ‘கட்டுப்பாடல்” மரபு மக்களின் சமகால வாழ்வியல் அனுபவ வெளிப்பாடுகளின் தொகுப்பாகும். அவர்கள் காலத்திற்குக் காலம் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கிய பல்வேறுபட்ட சமூக, அரசியல் சிக்கல்களையும் முரண்களையும் மத அனுபவங்களையும் தமது மொழியின் இயல்புநிலையில் நின்று பாடிவந்திருக்கின்றனர். கிழக்கிலங்கைத் தமிழ் மக்களின் சமூக வரலாற்றை இப்பாடல்கள் பதிவுசெய்கின்றன. சின்னத்தம்பி சந்திரசேகரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இளங்கலைமாணி, முதுகலைமாணி, கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். சூறாவளித் துயர் அம்மானை, புயல் காவியம், சூறாவளி அம்மானை, 1957ஆம் ஆண்டு பெருங்காற்று மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தம்மானை, சுனாமி கடல் கொந்தளிப்பு காவியம், பிள்ளைத் தவம், கவிகள் 1-3, மச்சான் மீராமுகைதீனுக்கு அனுப்பிய கவிகள், நோய் நீக்கும் ஒப்பாரி, நோயுற்றவருக்குப் பாடிய இரப்புத் துவா, வெளிநாடு போன வெள்ளம்மா, சத்தாரும் சௌதாவும், ரெண்டாயிரத்திப் பத்தாம் ஆண்டு வெள்ளம், வெள்ளாம வெட்டு, ஊரின் பழங்கால இக்கால நிலை, பொலிவெழந்த ஊர், அறப்பாடல்கள், அஷ்ரப் ஒப்பாரி, இராசமாணிக்கம் கும்மி, கனவு கண்டேன், மணப்பாறை மாடுகட்டி என்ற மெட்டு, அசறப்பை ஆதரிப்போம், பாலப்பாட்டு, சூடடி, செல்வெடி, கப்பலடி, அகதி, அகதிகள் ஒப்பாரி, வுக்கர், தமிழ் அகதிகளுக்காக மாமாங்கப் பிள்ளையார் தோத்திரம், மட்டக்களப்பு அமிர்தகழி பிள்ளையார் அகவல், விநாயகர் தோத்திரம், வன்செயல் கட்டுப்பாடல், திருக்கோயில் சித்திரவேல் செம்மல் பேரில் தமிழ்மொழி அனுதாபப்பாட்டு, செல்லப்பா சிறைமீண்ட திருப்பதிகம் ஆகிய தலைப்புகளில் இப்பாடல்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 062858).