13423 வருகையின் தூதன் சிறப்புமலர்-1988.

செ.யோ.செல்வராசா (மலராசிரியர்). மட்டக்களப்பு: கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமம், கிரான், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1988. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(22) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத்தின் 31வது வருடாந்த விழா 09.09.1988இல் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கிரான் பெரியண்ணன் கலையரங்கத்தினர் மேடையேற்றிய வருகையின் தூதன்(வடமோடி நாட்டுக்கூத்து) கூத்தும் மேடையேற்றப்பட்டது. கிறிஸ்தவ நற்செய்திகளை பாமர மக்களுக்குப் புகட்டும் வகையில் எழுதப்பட்ட நாட்டுக்கூத்தான ‘வருகையின் தூதன்’ , முற்தூதர் யோவானின் சரித்திரத்தை வடமோடிக் கூத்து மரபில் இங்கே மேடையேற்றியுள்ளனர். இவ்விரு நிகழ்வுகளையும் நினைவுகூரும் வகையில் இச்சிறப்புமலர் வெளிவந்துள்ளது. இம்மலரில் ஈழத்து நாட்டக்கூத்து மரபு: ஒரு தேர்ந்த நூல்விபரப்பட்டியல் (என.செல்வராஜா), வருகையின் தூதன் நாட்டுக்கூத்தின் கதை வடிவம், மேடையேற்றத்திற்குப் பொறுப்பாகவிருந்த கலைஞர்களின் விபரம், கத்தோலிக்க சமயமும் ஈழத்து நாட்டுக்கூத்து மரபும் (இ.பாலசுந்தரம்), எமது நாடக மரபு (சி.மௌனகுரு) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்