எம்.பாலகிருஷ்ணன். கொழும்பு 10: பிரிஷன்மி கிரியேஷன்ஸ், 33B, (N.H.S.), சிரி தம்ம மாவத்த, 2வது பதிப்பு, 1996, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 72 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 21×14.5 சமீ.
சிங்கள மூலம் தமிழும், தமிழ் மூலம் சிங்களமும் கற்றுக்கொள்வதற்கான உரையாடல் பயிற்சிகளைக் கொண்ட நூல். மரக்கறி வியாபாரியிடம் மரக்கறி வாங்குதல், பலசரக்குக் கடையில் பொருட்கள் வாங்குதல், அஞ்சல் அலுவலகத்தில் உரையாடுதல், அலுவலகமொன்றிற்குள் செல்லுதல், சோதனைச் சான்றிதழைக் கேட்டல், கடவுச் சீட்டுப் பெறுவதற்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்தல், பொலிஸ் அலுவலர் விசாரித்தல், பயணஞ் செய்தல், பஸ் தரிப்பிடம், ஒருவரைச் சந்திக்கச் செல்லுதல், நடத்துநரிடம் சீட்டு வாங்குதல், நோயாளியும் வைத்தியரும், புத்தகம் பற்றி விபரித்தல், உடல் உறுப்புக்கள், கிழமையின் ஏழு நாட்கள், பொதுவான வாக்கியங்கள், அடுத்த வீடு, பொதுவான உரையாடல்கள், எங்கள் ஊர், எழுத்து கோர்ப்பவர், ஊரைச் சிரிக்கவைத்த கோமாளியின் கதை, பிச்சைக்காரனும் அரசனும், பொறுக்கமுடியாத எழுத்துப்பிழை, நல்ல தண்டனை ஆகிய 24 தலைப்புக்களில்; இந்நூலில் உரையாடல்களுக்கு வழியமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41953).