அ.சிவஞானசீலன் (தொகுப்பாசிரியர்). கரவெட்டி: கலாசாரப் பேரவை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா, நெல்லியடி).
(4), x, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7756-00-4.
நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அ.சிவஞானசீலன் (27.6.1970) வன்னி மண்ணில் கல்வி பயின்றவர். யாழ்ப்பாணம் முதல் பல பிரதேசங்களில் வாழ்ந்தும் பணியாற்றியும் தான் சேகரித்த பிரதேச வழக்குச் சொற்களை ஒரு அகராதியாக இந்நூலில் வழங்கியிருக்கிறார். 15 ஆண்டுகளுக்கும் அதிகமான காலப்பகுதியில் கலாச்சார உத்தியோகத்தராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்ச் சிறப்புப் பட்டதாரியான இவர் பண்பாட்டியல் துறையில் முதுகலைமாணியுமாவார்.