அ.பொன்னையா. சுன்னாகம்: தனலட்சுமி புத்தகசாலை, 7வது பதிப்பு, ஜனவரி 1930. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(2), 93 பக்கம், விலை: 50 சதம், அளவு: 17.5×12 சமீ.
Tamil Grammar (Part II) for Standard VI என்ற ஆங்கிலத் தலைப்புடன் எழுதப்பட்ட ஆறாம்தர மாணவர்களுக்கான தமிழ் இலக்கணப் பாடநூல் இது. யாழ்ப்பாணம் ஆசிரியர் கலாசாலை அதிபரும் வித்தியாதரிசியுமாகிய கோப்பாய் அ.பொன்னையா அவர்கள் எழுதிய நூல் இது. இதில் விசேஷ விதிகள் அனைத்தும் இலக்கிய முறைகொண்டும், வசனங்கள் இயற்றலிலும் அவற்றின் பிழைகளைத் திருத்துவதிலும் இலக்கண முறை கொண்டும் விளக்கிக்காட்டப்பட்டுள்ளன. அவ்வப் பாடங்களுக்குரிய சூத்திரங்களும், அப்பியாசங்களும் ஒவ்வொரு பாட முடிவிலும் எழுதப்பட்டிருக்கின்றன. பெயர் வேற்றுமைகள், வினைப்பாகுபாடு, இலக்கணங் கூறல் வாக்கிய முடிபு, பகுபத உறுப்புக்காணல் முதலியன அட்டவணை மூலம் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2560).