நூல் வெளியீட்டுக்குழு. கண்டி: திருமதி P.தம்பித்துரை, கலைவாணி புத்தக நிலையம், 130, திரிகோணமலை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1955. (சென்னை: கபீர் பிரின்டிங் வேர்க்ஸ்).
(8), 152 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.50, அளவு: 18×12.5 சமீ.
இந்நூல், இலங்கைக் கல்விப் பகுதியினரின் புதிய பாடத்திட்டத்தைத் தழுவி எட்டாம் வகுப்பில் தமிழ் மொழி படிப்பித்தற்கு ஒரு பாடப் புத்தகமாக எழுதப்பெற்றது. உரைநடைப் பகுதி, செய்யுட் பகுதி என இரு பிரிவுகளில் எட்டாம் வகுப்புக்குரிய தமிழ்மொழிப் பாடங்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. உரைநடைப் பகுதியில் சேர்.பொன். இராமநாததுரை அவர்கள், ஒளவையார் அருந்திறன், சிலப்பதிகாரமும் மணிமேகலையும், தமிழுக்குத் தொண்டாற்றிய பிறநாட்டறிஞர்-1, தமிழுக்குத் தொண்டாற்றிய பிறநாட்டறிஞர்-2, எழில்மிக்க சிகிரியா, ஈழத்து இஸ்லாமியக் கவிஞர்கள், திரைப்படம், சி.வை.தாமோதரம்பிள்ளை, தமிழ் மருத்துவம், பண்டைப் புலவர்களுடைய பண்பாடுகள், திருக்குறளும் திருவள்ளுவரும், கன்னனும் கண்ணனும், மங்கோ பார்க், ஐக்கியநாட்டுச் சபை, ஒரு விநோதப் பாட்டு, பண்டைத் தமிழர் போர்முறை ஆகிய கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. செய்யுட் பகுதியில் கடவுள் வணக்கம், காதைப் பகுதி (நளவெண்பா-கலிதொடர் காண்டம், கம்பராமாயணம்-சூளாமணிப் படலம், வில்லிபாரதம்-கிருட்டினன் தூது, தேம்பாவணி, புத்தரும் ஏழைச் சிறுவனும், மனோன்மணீயம்), நீதிப் பகுதி (திருக்குறள், நாலடியார், திரிகடுகம், நான்மணிக் கடிகை), சாணக்கிய நீதி வெண்பா, ஏலாதி), பல்சுவைப் பகுதி (தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ்ப் புலவர் சிறப்பு, அருந்தமிழ்க்குரிய ஆக்க வேலைகள், கவித்திறமை, கடல், மழைப்பாட்டு) ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24703).