சு.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, திருத்திய 7வது பதிப்பு, ஆடி 1996, 6வது பதிப்பு, ஆனி 1992. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/2, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(4), 44 பக்கம், விலை: ரூபா 33., அளவு: 21.5×14 சமீ.
ஏழாம் ஆண்டு மாணவர்களின் எழுத்துப் பாடத்துக்குரிய துணை நூல். அவர்களின் மனவளர்ச்சியையும் கிரகிக்கும் ஆற்றலையும் சொல்வளத்தையும் கருத்திற்கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. எனது முதற் புகைவண்டிப் பிரயாணம், சிரிக்கும் மலர்கள், எனது செல்லப் பிராணி. எனது வீட்டில் நிகழ்ந்த நகைச்சுவைச்; சம்பவம், நான் ஒரு கிளியானால், நான் கண்ட கனவு, தந்தைக்குக் கடிதம், வானொலியின் பயன்கள், சேவலின் செருக்கு (கதையாக்கம்), இயற்கையின் சீற்றம், வகுப்புக் கதிரை (சுயசரிதை), எனது பாடசாலை விளையாட்டுப் போட்டி, காலைக்காட்சி, தொற்றுநோய்கள், உரையாடல்: பாடசாலைக் கொண்டாட்டம் ஒன்று, எங்கள் அருமைப் பாட்டி, எனது கிராமம், ஆசிரியருக்குக் கடிதம், நான் ஒரு தேனீ (சுயசரிதை), எனது பேனா, மழைநாள், சுவாமி ஞானப்பிரகாசர், நான் பார்த்த ஒரு திருமணம், நான் ஆசிரியரானால், ஒரு திருநாள்-தைப்பொங்கல், மலைநாட்டில் நான் கண்ட காட்சிகள், ஒழுக்கம் உயர்வு தரும் (கதையாக்கம்), நான் கண்ட ஒரு தெரு விபத்து, விடுமுறையைக் கழித்த முறை (உரையாடல்), கல்வியின் பெருஞ்சிறப்பு ஆகிய முப்பது தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38538).