க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 5ஆவது பதிப்பு, 1996, 4ஆவது பதிப்பு, 1992. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1/2, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(6), 42 பக்கம், விலை: ரூபா 33., அளவு: 21.5×14 சமீ.
எட்டாம் ஆண்டு மாணவர்களுக்கு உதவக்கூடிய வகையில் மாதிரிக் கடிதங்கள், கட்டுரைகள், கற்பனைக் கதைகள், அழைப்பிதழ்கள், உரையாடல்கள், கூட்ட அறிக்கைகள், செய்தி அறிக்கைகள் ஆகியன இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மாணவரை நாளாந்த வாழ்க்கையோடு இசைவுபடுத்திச் சமூக இசைவாக்கத்தோடு செயற்பட வைப்பதற்கு இத்தகைய பல்துறைக் கட்டுரையாக்கங்கள் உதவவல்லன. ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் குறித்த கட்டுரையிற் கையாளப்பட்ட சொற்களஞ்சியம் தரப்பட்டுள்ளது. நாள்தோறும் நான் செய்யும் கடன்கள், நினைவு நல்லது வேண்டும், நான் போற்றும் பெரியார், நெருப்பின் கதை, நாட்டுப்பற்று, இல்ல மெய்வல்லுநர் போட்டி, மழைநாள், தொலைக்காட்சி, குட்டிச்சுவரின் தன் வரலாறு, காலத்தின் அருமை, பனையின் பயன்கள், நாங்கள் செய்த சிரமதானப்பணி, கிராம வாழ்க்கையும் நகர வாழ்க்கையும், கண்டதும் கற்க, உண்மையே வெற்றி, பாடசாலை பரிசளிப்பு விழா வரவேற்புரை, கூட்ட அழைப்பிதழ், வாராந்தக் கூட்ட அறிக்கை, கடிதம் 1, கடிதம் 2 ஆகிய 20 தலைப்புகளில் இவ்வாக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29905).