பதிப்பாசிரியர் குழு. கொழும்பு 7: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறிமதிபாயா, 58, சேர் ஏர்னெஸ்ட் டி சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
(3), 48 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×12.5 சமீ.
முதலாம் தரத்தில் மொழிப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்-1 என்னும் பாடநூலில் உள்ள வாசிப்புப் பாடங்களை அடியொற்றி நிகழும் கிரகித்தற் பயிற்சி, சொற் பயிற்சி, எழுத்துப் பயிற்சி என்பனவற்றையும் கற்பிக்கும் முறையைக் கண்டறிவதே இந்நூலின் பிரதான நோக்கமாகும். இந்நோக்கம் நிறைவேறுவதற்கு உதவியாக, நூலின் அமைப்பு முறை, ஒழுங்கு முறை, கற்பிக்கும் நெறி என்பன விளக்கப்பட்டுள்ளன. அவற்றோடு பாடங்களில் அவதானிக்கவேண்டிய சிறப்பம்சங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டிய மாதிரிகைப் பயிற்சிகள் சிலவும் இங்கு இடம்பெற்றுள்ளன. இம்மாதிரிகளைப் பின்பற்றி ஆசிரியர்களே தமக்கேற்ற பல்வேறுவகைப் பயிற்சிகளை ஆக்கிக்கொள்ளலாம். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 009613).