இரா.ஜெயக்குமார். உரும்பிராய்: இரா.ஜெயக்குமார், 68/8, சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, 1வது பதிப்பு, டிசெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).
(8), 192 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ.
2017ஆம் ஆண்டின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும், ஆசிரியர் வழிகாட்டி நூலுக்கு அமைவாகவும் தயாரிக்கப்பட்ட இந்நூல் மாதிரி வினாத்தாள்களையும் விடைகளையும் கொண்டுள்ளது. நாட்டுப்புறக் கதைகள், கூண்டிற் கிளி, ஒரு பாட்டுடையான், பறவைகளின் இயைபாக்கம், முயற்சி திருவினையாக்கும், வாழ்வதற்காக வாசி, பேராசிரியர் ம.மு.உவைஸ், பசிப்பிணி மருந்து, ஆக்கிமிடீசு, நாடகமே உலகம், சொல்லின் இசை, சுதந்திர கீதம், பாலித்திட வேண்டுமம்மா, உயிர் இரக்கம், விநோதக் கதை, எலிப்பாட்டு, நீரின்றி அமையாது உலகு, குமணன் நாடகம், தேனியும் குளவியும், அடக்கம் உடைமை, மலையக நாட்டார் பாடல்கள் ஆகிய 21 அலகுகளாக இந்நூல் வகுக்கப்பட்டு அவற்றுக்குரிய பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இந்;நூலாசிரியர் யா/உடுவில் மான்ஸ் த.க.பாடசாலையின் அதிபராகப் பணியாற்றுகிறார்.