13439 தமிழ் மொழியும் இலக்கியமும்: செயல்நூல் தரம் 8.

இரா.ஜெயக்குமார். உரும்பிராய்: இரா.ஜெயக்குமார், 68/8, சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, 1வது பதிப்பு, டிசெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).

(8), 192 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ.

2017ஆம் ஆண்டின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும், ஆசிரியர் வழிகாட்டி நூலுக்கு அமைவாகவும் தயாரிக்கப்பட்ட இந்நூல் மாதிரி வினாத்தாள்களையும் விடைகளையும் கொண்டுள்ளது. நாட்டுப்புறக் கதைகள், கூண்டிற் கிளி, ஒரு பாட்டுடையான், பறவைகளின் இயைபாக்கம், முயற்சி திருவினையாக்கும், வாழ்வதற்காக வாசி, பேராசிரியர் ம.மு.உவைஸ், பசிப்பிணி மருந்து, ஆக்கிமிடீசு, நாடகமே உலகம், சொல்லின் இசை, சுதந்திர கீதம், பாலித்திட வேண்டுமம்மா, உயிர் இரக்கம், விநோதக் கதை, எலிப்பாட்டு, நீரின்றி அமையாது உலகு, குமணன் நாடகம், தேனியும் குளவியும், அடக்கம் உடைமை, மலையக நாட்டார் பாடல்கள் ஆகிய 21 அலகுகளாக இந்நூல் வகுக்கப்பட்டு அவற்றுக்குரிய பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இந்;நூலாசிரியர் யா/உடுவில் மான்ஸ் த.க.பாடசாலையின் அதிபராகப் பணியாற்றுகிறார்.

ஏனைய பதிவுகள்

17175 உறங்கும் உண்மைகள் (பாகம் 2).

குடும்பம், அரசு, சட்டம், மகிழ்ச்சி- கட்டுரைத் தொகுப்பு. எஸ்.ரி.நாதன் (இயற்பெயர்: செல்லத்துரை தவநாதன்). கனடா: செல்லத்துரை தவநாதன், Serving Tamils Organisation (STO), ஒன்ராரியோ, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கனடா: செல்வா கிராப்பிக்ஸ்,

10255 ஆசிரியர்களுக்கான கல்விப் புள்ளிவிபரவியல்.

க.ஞானரெத்தினம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 129 பக்கம், விலை: ரூபா

9338 மங்கல தரிசனம்: சைவசமய மங்கலச் சடங்குகள்.

ஆய்வுப் பிரிவு. கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி

9175 சைவ சமய பாடம்: ஆறாம் வகுப்பு.

கலைவாணி புத்தக நிலையம். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). iv, 122 பக்கம், படங்கள்,  விலை: சதம் 80., அளவு: 18×12.5 சமீ. அரசினரின் 1969ஆம்