நூலாக்கக்குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு: சிசாரா பிரின்ட்வே பிரைவேட் லிமிட்டெட்).
xiii, 243 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 24×18 சமீ.
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் க.பொ.த. உயர்தர மாணவர்களின் தேவை கருதி இலங்கை கல்வித் திணைக்களத்தின் வரலாற்றில் முதற்தடவையாக பாடநூல்களை எழுதி வெளியிட எடுத்த முயற்சியின் முதல் அறுவடையாக இந்நூல் அமைகின்றது. 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கான முறையில் தரம் 12-13 மாணவர்களுக்கான தமிழ் பாடநெறிக்குரிய பாடநூலாக இது வெளியிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் குழுவில் தா. பத்மா பத்மநாதன், தர்ஷினி ரதன், ஆ.ர்.ஆ.ஜவ்பர், ஆ.முஸ்தபா மஃஸ_ர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பதிப்பாசிரியர் குழுவில் நா.சீதரன், சி.காண்டீபன் ஆகியோர் இயங்கியுள்ளனர். இந்நூலில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், அமலனாதிபிரான், கங்கைகாண் படலம், தேம்பாவணி, காரணமாலை, பாரதியார் பாடல், பாரதிதாசன் கவிதைகள், ஈழநாட்டுக் குறம், பாரதியார், கவிஞன், எல்லாம் உமதே, வீசாதீர், தொண்டு ஆகிய 20 அலகுகளில்; பாடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலகும் படைப்பாளர் அறிமுகம், படைப்பு, பதப்பிரிப்பு, அரும்பதங்கள், உட்கருத்து, இலக்கியச் சிறப்பு, இலக்கணக் குறிப்பு, பயிற்சி வினாக்கள் என்ற ஒழுங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.