வட இலங்கை தமிழ்நூற் பதிப்பகம். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், திருத்திய 17வது பதிப்பு 1969, 1வது பதிப்பு 1953. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(4), 60 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: 70 சதம், அளவு: 21×14 சமீ.
இலங்கையில் ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடநூலாக நீண்டகாலம் வழக்கில் இருந்து வந்த பாட நூல். இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்புகளில் காணப்பட்ட தாமரை, உபயோகமான மிருகங்கள், காலம் ஆகிய பாடங்களும் தாய் தந்தையரை நமஸ்கரித்தல் என்ற செய்யுள் பாடமும் நீக்கப்பட்டு புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பதிப்பில் நல்ல சிறுவன், வீர சொக்கன், நாம் செய்யவேண்டியன, ஆலமரம், குயில், பேராசை கொண்ட செட்டி, கடற்கரை, தாடி அறுந்த வேடன், மயில் பேசுகிறது, உண்மையின் உயர்வு, வியாபாரியின் தந்திரம், காகமும் பாம்பும், அச்சமில்லை அச்சமில்லை, தென்னாலிராமன் குதிரை வளர்த்தது, பைசிக்கிள் வண்டி, ஊக்கத்தால் உயர்ந்தோன், பனை ஓலைப்பெட்டி(சுயசரிதை), வியாபாரியும் குரங்கும், பால், தேகப்பயிற்சி, சகோதர ஒற்றுமை, நீர், கொன்றை வேந்தன் (செய்யுட்பகுதி) ஆகிய 23 பாடங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24751).