கோணாமலை கோணேசபிள்ளை. கொழும்பு 13: டக்ஷயா பதிப்பகம், 104/1B, கொட்டாஞ்சேனை வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 150 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1726-04-1.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றும் கோணேசபிள்ளை விசேட கணித ஆசிரியராகவும் ஆங்கில ஆசிரியராகவும் கண்டி ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அட்டாளைச்சேனை ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளராகவும் முன்னர் பணியாற்றியவர். இவர் அவ்வப்போது எழுதிய பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். உலக வரலாற்றில் கணித விஞ்ஞான ஒளி பரப்பிய ஒப்பற்ற மேதை ஐசாக் நியூட்டன், அகில உலகிலும் உயர் அந்தஸ்தைப் பெற்றுள்ள நோபெல் பரிசும் அதன் வரலாறும், அறிவியல் வரலாற்றில் அதிசய விஞ்ஞானியாக விளங்கிய அல்பெர்ட் ஐன்ஸ்ரைன், இந்தியாவிலே படித்து ஆசியாவிலேயே முதன்முதல் பௌதிகவியலுக்கு நோபெல் பரிசைப் பெற்று சாதனை படைத்த இந்திய விஞ்ஞானி சி.வி.ராமன், அகில உலக புகழ்பெற்ற உளவியலாளர் ஜெரோம் செமர் புறுணர், சர்வதேசப் பயன்பாட்டுக்காக நடைமுறையில் இருக்கும் எண் முறை, அகில உலகரீதியில் புகழ்பெற்று விளங்கும் நோபெல் பரிசுக்கு இணையாக கணிதத்துக்கு வழங்கப்படும் எபெல் பரிசு (Abel Prize), இளமையிலேயே சாதனை படைத்த இந்திய கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன், கணிதச் செயற்பாடுகளை வேகமாகச் செய்து உலகப் பகழ்பெற்ற சாதனையாளர் சகுந்தலாதேவி, ஆறுமுகம் என்னும் அதிசயமான கணிதச் செய்கைச் சாதனையாளர், கல்விப் பணியில் 125 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விழா கொண்டாடிய TC என்னும் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடம், நூல்களைப் பகுப்பாய்வு செய்தலையும் அவற்றுக்கு குறிப்பெண் இடுவதையும் அறிமுகப்படுத்திய சாதனையாளர் மெல்வில் டூயி, கணிதம் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டை எவ்வாறு மேம்படுத்தலாம்? உலக ஆசிரியர் தினம், நெஞ்சம் மறப்பதில்லை என்பது உண்மையா? ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62524).