சி.நடராசர். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1968, 1வது பதிப்பு, 1959. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
x, 393 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
நூலாசிரியர் சி.நடராசர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஆங்கிலத்தில் எழுதிய Elements of Pure Mathematics என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். இதில் திரிகோணகணிதம், ஆள்கூற்றுக் கேத்திரகணிதம், நுண்கணிதம், அட்சர கணிதம், திண்மக் கேத்திரகணிதம் ஆகிய ஐந்து பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ளதுடன் விரிவான பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14074).