13451 கணிதம் பயிற்சி நூல் தரம் 7: புதியபாடத்திட்டம் 2016.

வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 2வது பதிப்பு, ஜனவரி 2018, 1வது பதிப்பு, ஜனவரி  2017. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்).

 viii, 270 பக்கம், விலை: ரூபா 380., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7315-00-3.

விரிவான விளக்கங்கள், பொருத்தமான உதாரணங்கள், நிறைவான பயிற்சிகள், திருத்தமான விடைகள் ஆகியவற்றுடன் வெளியிடப்பட்டுள்ள ஏழாம் தரத்துக்குரிய இப்பயிற்சிநூல் 2016 புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகப் பூரணமான பாடப்பரப்பினை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இருபடைச் சமச்சீர், தொடைகள், முழுவெண்கள் மீதான கணிதச் செய்கைகள், காரணிகளும் மடங்குகளும், சுட்டிகள், காலம், சமாந்தரக் கோடுகள், திசை கொண்ட எண்கள், கோணங்கள், பின்னங்கள், தசமங்கள், அட்சரகணிதக் கோவைகள், திணிவு, நேர்கோட்டுத் தளவுருக்கள், சமன்பாடுகளும் சூத்திரங்களும், நீளம், பரப்பளவு, வட்டங்கள், கனவளவு, திரவ அளவீடு, விகிதங்கள், சதவீதம், தெக்காட்டின் தளம், நேர்கோட்டுத் தளவுருக்களை அமைத்தல், திண்மங்கள், தரவுகளை வகைக்குறித்தலும் விளக்கம் கூறுதலும், அளவிடைப் படங்கள், தெசலாக்கம், ஒரு நிகழ்வின் இயல்தகவு, விடைகள் ஆகிய 30 பாடத்தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13087 விடுதலை தரும் இறையரசு: ஒரு கண்ணோட்டம்.

அன்ரன் மத்தாயஸ். யாழ்ப்பாணம்: கிறிஸ்தவ நாகரிகத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. இறை அரசு