வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 1வது பதிப்பு, ஜுன் 2018. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்).
viii, 309 பக்கம், விலை: ரூபா 380., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7315-02-7.
விரிவான விளக்கங்கள், பொருத்தமான உதாரணங்கள், நிறைவான பயிற்சிகள், திருத்தமான விடைகள் ஆகியவற்றுடன் வெளியிடப்;பட்டுள்ள ஒன்பதாம்; தரத்துக்குரிய இப்பயிற்சிநூல் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகப் பூரணமான பாடப்பரப்பினை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எண் கோலங்கள், துவித எண்கள், பின்னங்கள், சதவீதம், அட்சர கணிதக் கோவைகள், அட்சர கணிதக் கோவைகளின் காரணிகள், வெளிப்படையுண்மைகள், நேர்கோடுகள் சமாந்தரக் கோடுகள் தொடர்பான கோணங்கள், திரவ அளவீடு, நேர் விகித சமன், கணிகருவி, சுட்டிகள், மட்டந்தட்டலும் விஞ்ஞானமுறைக் குறிப்பீடும், ஒழுக்குகளும் அமைப்புகளும், சமன்பாடுகள், முக்கோணியொன்றின் கோணங்கள், சூத்திரங்கள், வட்டமொன்றின் பரிதி, பைதகரசின் தொடர்பு, வரைபுகள், சமனிலிகள், தொடைகள், பரப்பளவு, நிகழ்தகவு, பல்கோணிகளின் கோணங்கள், அட்சரகணிதப் பின்னங்கள், அளவிடைப்படங்கள், தரவுகளை வகைகுறித்தலும் விளக்கம் கூறலும் ஆகிய 28 பாடங்களும் அவற்றின் பயிற்சிகளுக்கான விடைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.