வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2016. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்).
viii, 357 பக்கம், விலை: ரூபா 430., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42543-1-2.
விரிவான விளக்கங்கள், உதாரணங்கள், பயிற்சிகள், திருத்தமான விடைகள் ஆகியவற்றுடன் வெளியிடப்பட்டுள்ள க.பொ.த. பத்தாம் தரத்துக்குரிய இப்பயிற்சிநூல் 2015 புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகப் பூரணமான பாடப்பரப்பினை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றளவு, வர்க்கமூலம், பின்னங்கள், ஈருறுப்புக் கோவைகள், முக்கோணிகளின் ஒருங்கிசைவு, பரப்பளவு, இருபடிக்கோவைகளின் காரணிகள், முக்கோணிகள், நேர்மாறு விகிதசமன், தரவுகளை வகைகுறித்தல், அட்சரகணிதக் கோவைகளின் பொது மடங்குகளுட் சிறியது, அட்சரகணிதப் பின்னங்கள், சதவீதம், சமன்பாடுகள், இணைகரங்கள், தொடைகள், மடக்கை, வரைபுகள், வீதம், சூத்திரங்கள், அட்சரகணிதச் சமனிலிகள், கூட்டல் விருத்தி, எண் பரம்பல், வட்டத்தின் நாண்கள், அமைப்புகள், மேற்பரப்பளவும் கனவளவும், நிகழ்தகவு, வட்டத்தின் கோணங்கள், அளவிடைப்படம் ஆகிய 32 பாடப்பரப்புகளை இந்நூல் உள்ளடக்குகின்றது.