அரசகருமமொழித் திணைக்களம். கொழும்பு 5: அரசகருமமொழித் திணைக்களம், வெளியீட்டுப் பகுதி, 5, பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
(4), 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×16 சமீ.
இலங்கையில் உயர்நிலைக் கல்வி சுயமொழிமூலம் கற்பிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் எடுத்தவேளையில் அதற்கு இன்றியமையாத பொருத்தமான கலைச்சொற்களின் பயன்பாடு பற்றிய தீர்மானத்தையும் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் இலங்கை அரசகரும மொழித்திணைக்களம் பல்வேறு துறைசார்ந்த கலைச்சொற்றொகுதிகளை அவ்வத்துறை விற்பன்னரின் உதவியுடன் உருவாக்கியிருந்தன. அவ்வகையில் நிலஅளவை (Surveying) கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பாக்கத்தில் இலங்கைப் பல்கலைக்கழக பெறியியல்துறை விரிவுரையாளர் த.சிவப்பிரகாசபிள்ளை, அரசகரும மொழித் திணைக்கள அதிகாரி வே.சிவகுரு, அரசகரும மொழித் திணைக்கள உதவி ஆணையாளர் அ.வி.மயில்வாகனம், அரசகரும மொழித் திணைக்கள அதிகாரி இ.முருகையன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25604).