13457 தேசிய உயர்கல்விச் சான்றிதழ்க்குரிய பௌதிகம் (3ஆம் பாகம்).

ஆ.வி. மயில்வாகனம் (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1977. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

பக்கம் 273-416, விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

இப்பகுதியில் வெப்பநிலையும் வெப்பநிலை அளத்தலும், திண்மங்கள் வெப்பத்தால் விரிதல், திரவங்களின் வெப்ப விரிவு, வாயுக்களின் விரிவு, வெப்பக் கணியம், தன்வெப்பக் கொள்ளளவு, நிலைமாற்றம், வெப்பம் இடம் மாறும் முறைகள், வெப்ப எஞ்சின்கள் ஆகிய அத்தியாயங்களில் பௌதிகத்தின் வெப்பவியல் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆங்கில மூலநூலின் பதிப்பாசிரியர் குழுவில் G.E.விஜேசூரிய, A.H.W.யகம்பத், ந.வாகீசமூர்த்தி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழ் மொழிபெயர்ப்புப் பதிப்பாசிரியர்களாக இ.முருகையன், ந.வாகீசமூர்த்தி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். விளக்கப்படங்களை R.P.மாவில்மட வரைந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35450).

ஏனைய பதிவுகள்