எஸ்.தில்லைநாதன். கொழும்பு 6: திரு. எஸ்.தில்லைநாதன், ஆசிரியர், இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 1999. (கொழும்பு 6: கிரிப்ஸ்).
viii, 136 பக்கம், தகடுகள், விலை: ரூபா 150., அளவு: 22×14.5 சமீ.
S,P- தொகுப்பு மூலகங்கள் மற்றும் இரண்டாம் மூன்றாம் ஆவர்த்தனப் போக்குகள் அடங்கிய இவ்வெளியீடு, முக்கியமாக இரண்டு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று, க.பொ.த. (உயர்தர) இரசாயன பாடத்தின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான விடயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இரண்டாவதாக, பல துணை நூல்களில் இருந்தும் பெறப்பட்ட விடயங்களைத் தொகுத்து பொதுவானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான கருத்துக்களைத் தாங்கி வருகின்றது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறமுடியும். S-Block, 3rd Period, Group III, Group IV, Group V, Group VI, Group VII, Group 0, Hydrogen, d-block ஆகிய 10 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37530).
அசேதன இரசாயனம் S-தொகுப்பு, P-தொகுப்பு, 3d-தொடர்.
எஸ்.தில்லைநாதன். கொழும்பு 6: திரு. எஸ்.தில்லைநாதன், 6/1, டாக்டர் ஈ.ஏ.குரே மாவத்தை, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, ஒக்டோபர் 2003, 1வது பதிப்பு, மே 1999. (கொழும்பு 6: கிரிப்ஸ்).
179 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.
S- தொகுப்பு மூலகங்கள், இரண்டாம் மூன்றாம் ஆவர்த்தனப் போக்குகள், P- தொகுப்பு மூலகங்கள், கூட்டம் IVA, கூட்டம் VA, கூட்டம் VIA Chalocogens, கூட்டம் VIIA Halogens, பூச்சியக் கூட்டம் அல்லது கூட்டம் VIIIA ஐதரசன், d- தொகுப்பு மூலகங்கள் ஆகிய பத்து அலகுகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37035).