தம்பையா சத்தீஸ்வரன். யாழ்ப்பாணம்: சுபாசினி சத்தீஸ்வரன், 108, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், 295/7, காங்கேசன்துறை வீதி).
(4), 64 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு: 20.5×14 சமீ.
இரசாயனவியலின் ஒரு பகுதியான அசேதன இரசாயனம் பற்றிய இந்நூலில் ஒட்சியேற்றம், தாழ்த்தல் பற்றிய தெளிவான அடிப்படைக் கருத்துக்கள், கொள்கை விளக்கங்கள், என்பன தரப்பட்டுள்ளன. அறிமுகம், ஒட்சியேற்றம், தாழ்த்தல், தாழ்த்தும் கருவியும் ஒட்சியேற்றும் கருவியும், சில தாழ்த்தல் ஏற்றத்தக்க வகைகள், ஒட்சியேற்ற எண் அல்லது நிலை, ஒட்சியேற்ற நிலையைத் தெரிதலுக்கான விதிகள், ஒட்சியேற்றல் எண்ணும் பெயரீடும், தாழ்த்தல் ஏற்றத் தாக்கங்களை ஒட்சியேற்றல் எண்படி விளக்குதல், ஒட்சிஎண் கொள்கையின் உபயோகங்கள், ஒட்சிஎண் கொள்கையால் ஏற்படும் சில பிரச்சினைகள், இருவழி விகாரம், சில மூலகங்களின் தாழ்த்தல் ஏற்றல் நடத்தைகள், சில ஒட்சியேற்றும் கருவிகள், சில தாழ்த்தும் கருவிகள், சில ஒட்சியேற்றித் தாழ்த்தல் தாக்கங்கள், ஒட்சியேற்றியாகவும் தாழ்த்தியாகவும் தொழிற்படும் சில கூறுகள், ஒட்சியேற்ற தாழ்த்தல் நியமிப்புகள், சில ஒட்சியேற்றத்; தாழ்த்தல் சமன்பாடுகளும் கணிப்புகளும், பரீட்சை மாதிரி வினாக்கள், முடிவுரை ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தம்பையா சத்தீஸ்வரன், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இரசாயினியாகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35294).