பொன். செல்வரத்தினம். யாழ்ப்பாணம்: ஆ.துரைராஜசிங்கம், 141, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, வைகாசி 1981. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம்).
(4), 99 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 12.00, அளவு: 21×14 சமீ.
ஓகஸ்ட் 1981 முதல் நடாத்தப்படும் புதிய க.பொ.த. உயர்தர பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சடப்பொருளின் துணிக்கைத் தன்மை, சடப்பொருளும் அணுக்களும், மூலக்கூறுகள், சார் அணுத்திணிவும் சார் மூலக்கூற்றுத் திணிவும், மூல், பீசமானம் ஆகிய பாடப்பரப்புகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. பல்தேர்வு வினாக்களும் விடைகளும் நூலின் இறுதிப் பகுதியில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33110).