பா.இரகுவரன். பருத்தித்துறை: பா.இரகுவரன், தேடல் வெளியீடு, பிராமின் வீதி, தும்பளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (பருத்தித்துறை: தீபன் பதிப்பகம்;).
(6), ix, 98 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43055-1-9.
அழிந்துவரும் இயற்கைத் தாவரமான கண்டல் மரங்கள் நிறைந்த வடமராட்சி கிழக்குப் பகுதிகளுக்கு களப்பயணம் மேற்கொண்டு வடமராட்சி வலயத்தின் களக் கற்கை நிலையத்தினரின் ஆசிரியர் குழுவினருடன் இணைந்துகொண்ட நூலாசிரியர் தனது நேரடி அனுபவங்களையும் அவதானிப்புகளையும் அருகிவரும் கண்டல் தாவரத்தின் பல்பரிமாணப் பார்வையுடன் இந்நூலில் வழங்கியுள்ளார். கண்டல் தாவரங்கள்/இலங்கையில் கண்டல் தாவரங்களின் பரம்பல்/ உலகில் கண்டல் தாவரச் சூழல் தொகுதிகள்/ கண்டல் சூழல் தொகுதியும் கண்டல் சாகியமும்/கண்டல் தாவரங்களில் காணப்படும் முக்கிய இசைவாக்கங்கள்/ கண்டல் தாவரங்களின் இலைகளில் நீர் இழப்பைத் தடுப்பதற்கான இசைவாக்கங்களும் உப்பு நீக்கல் செயற்பாடும்/ இலங்கையில் கண்டல் காடுகள்/ உலகளாவியரீதியில் கண்டல் காடுகளையும் அதன் சூழலையும் பாதிக்கும் காரணிகள்/உலகளாவியரீதியில் கண்டல் காடுகளின் பயன்கள்/ கண்டல் காடுகளில் பறவைகளும் விலங்குகளும் ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முடிவுரையுடன் எட்டு பயனுள்ள பின்னிணைப்புகளும் இந்நூலில் காணப்படுகின்றன.