13474 உயிரின் உண்மைகள்: அறிவியல் தேடல்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2013. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).

28 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 20×21.5 சமீ., ISBN: 978-955-8715-90-1.

சிறுவர்களுக்கான விலங்கு நடத்தைகள் பற்றிய அறிவூட்டும் வகையில் குறுந் தகவல்களுடன் படவிளக்கங்கள் சகிதம் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வண்ணக்குயில், தற்கொலைப் பறவை, தவளைவாயன், விளக்கேற்றும் பறவை, தொங்கும் பறவை, வெளவால், குறட்டை விலங்கு, உதவும் மீன், நீந்தும் வாத்துக்கள், நரி, முட்டைகள், நண்டு, தூக்கம், ஹம்மிங் பறவை, மீன்கூடு, முதலைகள், யானை, டோடோ, உராங் உடான், புஸ்பேபி, குயிலின் தந்திரம், பறக்கும் அணில், ஒளிரும் பல்லி, உருவத்தை மாற்றும் மீன், ராட்சத சிலந்தி, பன்றியின் முள், தலைகீழ் உணவு, எலும்பு தின்னி, வயிற்றில் பை, ஆல்பட்ராஸ், கண்ணாடிப் பறவை, எலிமான், முள்ளம்பன்றி, மான்கள், பசு, நீர்யானை, ராக்கூன், வல்லூறு, திமிங்கிலம், காலிங் ஹெயர், தவளை ஆகிய ஆர்வத்தைத் தூண்டும் தலைப்புகளில் வழங்கப்பட்டுள்ள குறிப்புகள் சிறுவர்களை மேலதிகத் தகவல்களை நாடிச்செல்லத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் 80ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்