13479 சுக வாழ்வும் உடற்பயிற்சியும்.

வட மாகாண சுகாதார அமைச்சு. யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, இணை வெளியீடு: யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

68 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் சிறுவர்களின் அன்றாட உடற்பயிற்சி செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் வழிமுறைகள், உடற்பருமனும் உடற் பயிற்சியும், உடற் பயிற்சி செய்வதால் உடலையும் உயிரையும் பாதுகாக்கலாம், நீரிழிவு நோய் ஏற்படுவதை உடற்பயிற்சி மூலம் தடுப்போம், உங்களுக்கு உயர் குருதி அமுக்கம் உள்ளதா? பெண்களின் ஆரோக்கியம், கார்ப்பகாலத்தின் போதான உடற்பயிற்சிகளும் மெய்நிலைகளும், பிரசவத்திற்குப் பின்னான உடற்பருமனும் பயிற்சிகளும், பெண்களின் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின்னரான உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சியும் ஒஸ்டியோபோரோசிசும், அனீமியா எனப்படும் இரத்தசோகை ஆகிய தலைப்புகளில் சுகாதார விடயங்கள் பேசப்பட்டுள்ளன. வடமாகாண சுகாதார அமைச்சு  2016இல் நடத்திய வடமாகாண ஆரோக்கிய விழாவையொட்டி வெளியிடப்பட்ட பிரசுரங்களில் இதுவும் ஒன்று.

ஏனைய பதிவுகள்

17652 ஒரு சின்னக் கதை.

வயிரமுத்து திவ்வியராஜன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது

15408 சினிமாத் தடம்.

ஜி.ரி.கேதாரநாதன். ஐக்கிய இராச்சியம்: நிகரி வெளியீட்டாளர்கள், 19, Goodwood Way, Lincoln, LN60FZ,  இங்கிலாந்து, 1வது பதிப்பு, ஏப்ரல் 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவர்கிரீன் அச்சகம், 693, காங்கேசன்துறை வீதி). 212 பக்கம், விலை:

10614 புலம்பெயர்ந்தவர்களின் புலம்பல்.

வாசு-முத்தழகன் (இயற்பெயர்: வாசுதேவலிங்கம் முத்தழகன்). யாழ்ப்பாணம்: ஈழத்தமிழர் சைவப் பண்பாட்டுக்கழகம், 120/4 திருவள்ளுவர் சாலை, கந்தர்மடம், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: கற்பகவிநாயகர் அச்சகம், 295/7, காங்கேசன்துறை வீதி). (8), 42 பக்கம், விலை: