13489 எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்: கழுத்து, முதுகுப் பிரச்சினைகளுக்கான மாற்று வழிகள்.

ஹன்ஸ் மேதர். இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீட்டாளர்கள், 41, லும்பினி அவென்யூ, 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, 2004. (இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீட்டாளர்கள்).

xiii, 102 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 955-599-462-5.

டாக்டர் ஹன்ஸ் மேதர், நெதர்லாந்தில் உடற்கூற்று கல்வி, உடற்கூற்று சிகிச்சை என்பவற்றில் பட்டம் பெற்றவர். பல்வேறு நாடுகளிலும் தேசிய விளையாட்டு ஆசானாகப் பணிபுரிந்தவர். 1997இல் இந்தியாவில் மாற்று வைத்திய முறைகளுக்கான மருத்துவத்திற்கு டாக்டர் பட்டத்தை இந்திய மாற்று மருத்துவ சபையிடம் இருந்து பெற்றவர். 2002 முதல் கொழும்பு அப்போலோ மருத்துவமனையில் ஓர்தோபீPடிக் கைமருத்துவ நிபுணராகப் பணியாற்றுகிறார். கழுத்து, முதுகுப் பிரச்சினைகளுக்கான மாற்று வழிகளில் பயன்படுத்தும் கைவைத்தியம் பற்றி இந்நூலை இவர் எழுதியுள்ளார். அறிமுகம், எலும்பு விலகல்களின் மருத்துவத்தின் சரித்திரம், முதுகெலும்பின் அங்க அமைப்பு, கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலி, நெஞ்சறை முள்ளென்புகளில் ஏற்படும் நோவு, நாரி முள்ளென்புகளில் ஏற்படும் நோவுகள், முதுகெலும்பைப் பரிசோதனை செய்தல், கழுத்து, நெஞ்சறை முள்ளென்புகள், நாரி முள்ளென்புகள், முதுகெலும்பு உறுதிநிலை, நரம்பு வேரில் எரிச்சல், மூட்டுக்களின் அசைவுகள், முதுகெலும்பின் அமைப்புப் பரிசோதித்தல், உணர்வு, அசைவு, சிரோ பயிற்சியும் OMT யும், எதிர்மறை அறிகுறிகள், ஓர்தோபீடிக் பிரச்சினைகள், OMT சிகிச்சை, OMT சிகிச்சையை ஆரம்பித்தல், இடது இடுப்பு மூட்டைச் சரிப்படுத்தல், வலது இடுப்பு மூட்டைச் சரிப்படுத்தல், முழங்கால் மூட்டைச் சுயமாகச் சரிப்படுத்தல், திருவென்பும் குயிலலகும், திருவென்பைப் பரிசோதித்தல், திருவென்பு மூட்டைச் சரிப்படுத்தல், திருவென்பு மூட்டைச் சுயமாகச் சரிப்படுத்தல், குயிலலகைப் பரிசோதித்து சரிப்படுத்தல், நாரி முள்ளென்புகளைச் சரிப்படுத்தல், கழுத்து முள்ளென்புகளைப் பரிசோதித்து சரிப்படுத்தல், ஏனைய மூட்டு விலகல்களுக்கான OMT சிகிச்சை, சக்தியைத் தேடிவரும் வலிகள், நோயாளிகளைப் பற்றிய விபரங்கள், அருஞ்சொல் அகராதி ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47973).

ஏனைய பதிவுகள்